Monday, March 15, 2010

"நான்(தான்) தந்தை" - என் தந்தை


உங்களுக்காகவே நான் வாழ்கிறேன் என்று

சீரும் சிறப்புமாக முதல் மகனுக்கு திருமணம் செய்தார்

உங்களுக்காகவே நான் உழைகின்ரேன் என்று

தன் மக்கள் ஒன்றாய் வாழ வீடு கட்டினார்

உங்களுக்காகவே நான் உயிருடன் இருகிறேன் என்று

பேரன் / பேத்திக்கு ஆபரணங்கள் அணிவித்து மகிழ்ந்தார்

உங்களுக்காகத்தான் நான் வாழ்கிறேன் என்று

இரண்டாம் மகனுக்கு அனைவரும் வியக்க திருமணம் நிகழ்த்தினார்

உங்களுக்காகத்தான் நான் உழைகின்ரேன் என்று

வியாபாரம் செய்தார் தன் மண்டையை உடைத்து மூளையை கசக்கி

உங்களுக்காகத்தான் நான் உயிருடன் இருகிறேன் என்று

எந்நேரமும் மற்றவர்களுக்காகவே சேவை செய்தார்

அனைத்தையும் செய்தார் அனைவருக்காகவுமே நான் நான் என்று

வாங்கிய வட்டிக்கு பணம் கட்ட முடியாமல்

இருப்பினும் இறுதியில் தான் புரிய வரும் அவர் பாச எண்ணம்

"அடடே கட்டிய வீட்டிற்க்கு தன் மக்களுக்கு AC மாட்டித் தர முடியவில்லையே!!" என்று ....
(Please wait, இன்னு முடியல)
இத்தனை செய்தும் செய்வதறியாது (அமைதியாக) திகைத்துப் போயிருக்கும் அம்மா
தந்தைக்கு ஓய்வு கொடுக்க தீவிரமாக முயற்சிக்கும் மக்கள்
எங்கோ ஆரம்பித்து எப்படியோ போய்கொண்டிருக்கும் இந்த க(வி)தையை எழுதும் "நான்"

ஐயோ, ஒரு நிமிடம் - அப்பாவின் "நான்" வியாதி எனக்கும் வந்துவிட்டதோ?!

- மூன்றா'மவன்' !!